தயாநிதி மாறன் மத்திய தகவல் தொடர்பு அமைச்சராக இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துககு விற்கச் செய்ததாக  புகார் எழுந்தது.
இதற்கு பதில் உதவியாக, மொரீஷியஸ் நிறுவனங்களிடம் இருந்து தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சவுத் ஏஷியா எப்எம் லிமிடெட் மற்றும் சன் டைரக்ட்  பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு 742  கோடி கைமாறியுள்ளதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து , அமலாக்கப்பிரிவு சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தது. .
இந்த இரு  வழக்குகளும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக் கோரி கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு நாளை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மாறன் சகோதரர்களுக்கு  ஜாமீன் கிடைக்குமா அல்லது சிறைக்கு செல்வார்களா என்பது நாளை தெரியவரும்.