பெங்களூரு: பெரும் எண்ணிக்கையிலான புதிய நோட்டை வீட்டில் வைத்திருப்பதை சட்டப்படி ஒரு குற்றமாக கருத இயலாது என கர்நாடக உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 9-ஆம் தேதி பெங்களூருவில் சி.பி.ஐ இப்ராஹிம் ஷெரீஃப் என்ற ஒப்பந்ததாரரது வீட்டில் ரெய்டு நடத்தி அதில் 4.8 கோடி புதிய நோட்டுக்களை கண்டுபிடித்தது. கர்நாடக உயர்நீதி மன்றத்தில் இதுகுறித்து நடைபெற்ற வழக்கில் இப்ராஹிம் ஷெரீஃப் சார்பாக வாதாடிய அவரது வழக்கறிஞர் சி.ஹெச்.ஜாதவ், இப்ராஹிமுக்கு தனது வருமான வரி கணக்குகளை சமர்ப்பிக்க மார்ச் 2017 வரை கெடு இருக்கிறது. அதற்குள் அவரை வரிஏய்ப்பு செய்த குற்றவாளியாக சித்தரிக்க முயற்சிப்பது தவறானது என்று தெரிவித்தார்.
இவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் பைரரெட்டி, “இந்த வழக்கின் அடிப்படையே கேள்விக்குரியதாக உள்ளது. பெரும் எண்ணிக்கையிலான புதிய நோட்டை வீட்டில் வைத்திருப்பதை சட்டப்படி ஒரு குற்றமாக கருத இலயாது. எனவே இப்ராஹிம் ஷெரீஃபை சி.பி.ஐ கைது செய்யக்கூடாது” என்று உத்தரவிட்டார்.
Keeping of cash at home is not an offence Karnataka high court judge gives ruling, Keeping cash at home, Karnataka High Court, Demonetisation, Ibrahim Sheriff