டில்லி,
ஜியோவின் இலவச சேவை நீட்டிக்கப்படுவதாக ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் அனைத்து கால்களும் இலவசம், மற்றும் 4G டேட்டா சேவையையும் இலவசமாக உபயோ கித்துக் கொள்ளலாம் என்னும் அதிரடி அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்னர் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
மேலும், ஜியோ சிம்களை இலவசமாகவே மக்களுக்கு அளித்தது.

இச்சேவை 3 மாத காலத்திற்கு இலவசமாக அளிக்கப்படும் எனவும் அறிவித்திருத்தனர்.
இதன் காரணமாக இலவச ஜியோ சிம்களை வாங்க பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு ரிலையன்ஸ் கடைகளில் வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.
ஜியோவின் வருகையால் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஏர்செல், வோடவோன், ஐடியா முதலிய நிறுவனங்கள் பெரும் பாதிப்படைந்தாலும் ஜியோ ஆப்ஸ், ஜியோ மணி, இலவச திரைப்படங்கள், பாடல்கள், இலவச தொலைக்காட்சி சேவை என அனைத்தையும் இலவசமாக அளிப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது ஜியோ.
இதில் நாடு முழுவதும் 52 மில்லியன் (5 கோடியே 20 லட்சம்) வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜியோவில் இணைபவர்களுக்கு வரவேற்பு சலுகையாக அளிக்கப்படும் இலவச சேவை வரும் டிசம்பர் 3ந்தேதியுடன் முடிவடையை இருந்த நிலையில் இது நீட்டிக்கப்படுமா அல்லது மற்ற நெட்வொர்க்குகளின் எதிர்ப்பால் குளோஸ் செய்யப்படுமா என வாடிக்கையாளர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது,
அடுத்த ஆண்டு (2017) மார்ச் மாதம் 31ம் தேதி வரையில் ஜியோ சிம்களின் இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும், இனி மொபைல் நம்பர் போர்டபிலிட்டியை ஜியோ சிம்கள் சப்போர்ட் செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஜியோ எளிமையாக்கும் எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
பிரதமரின் ரூபாய் நோட்டு மாற்றம் அறிவிப்பிற்கும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார், மின்னணு பணப் பரிமாற்றத்தை ஊக்கு விப்பதால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் எனவும், நாட்டின் 100 முக்கிய நகரங்களுக்கு டிசம்பர் 31ம் தேதிக்குள் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2017 மார்ச்-31 வரை ஜியோவின் இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel