றைந்த கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவை, கொடூர சர்வாதிகாரி என்றும் இனி கியூபா மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்றும் , அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருப்பது இரு நாடுகளுக்கிடையேயான  உறவில் மீண்டும் விரிசலை ஏற்படுத்தியிக்கிறது.
oo
கியூபாவில் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தவர் பிடல் காஸ்ட்ரோ. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்த்த தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் தனது 49 ஆண்டுகால ஆட்சி காலத்தில், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பில் தீவிரமாக இருந்தவர்.
உடல் நல பிரச்சினையால் கடந்த 2008-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார். தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவை கியூபா அதிபராக்கினார்.
இந்த நிலையில் நேற்று பிடல் காலமானார்.  இவரது மறைவை அந்த நாட்டு மக்கள் பெரும் துக்கமாக அனுசரித்து வருகின்றனர். காஸ்ரோவின் மறைவிற்கு உலகம் முழுவதும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், “கடந்த 60 ஆண்டுகளாக கியூபா, சர்வாதிகாரத்தின் பிடியில் சிக்கியிருந்தது. காஸ்ட்ரோ ஏற்படுத்திய உயிரிழப்புகள், ரணங்கள், வலிகள் என்றும் ஆறாது.  காஸ்ட்ரோவின் மரணத்தை அடுத்து, இனி, கியூபா மக்கள் சுதந்திரமாக வாழும் காலம் வரும்.  அமெரிக்காவில் புதிதாக அமையவுள்ள தனது தலைமையிலான அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-கியூபா இடையே ஐம்பாதாண்டுகளாக நீடித்துவந்த மோதல், போக்கு, ஓபாமா அதிபரான பின் ஓரளவு குறைந்தது. இந்த நிலையில் டிரம்ப் தெரிவித்த அதிரடி கருத்துக்களால், மீண்டும் இரு நாடுகளுக்கிடையே மோதல் போக்கு ஏற்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.