
நடிகர் விக்ரம் இருமுகன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்போது கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணையவுள்ளாராம், இந்த செய்தியை இதற்கு முன்பு அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கௌதம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது..
தற்போது இந்த கூட்டணி இணைந்த அதிகாரப்பூர்வ செய்தி இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிகின்றது, கௌதம் வாசுதேவ் மேனன் விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை இயக்கவுள்ளாராம், இதற்கு முன்பு இந்த திரைப்படத்தில் சூர்யா நடிக்க வேண்டியது ஆனால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை.
இதனால் தான் இப்போது கௌதம் விக்ரமை வைத்து இயக்கவுள்ளாராம், இந்த திரைப்படத்தில் இரண்டு கதாப்பாத்திரங்களாம் ஒன்று விக்ரம் மற்றொன்று இவருக்கு இணையான பாத்திரம் என்பதனால் அந்த வேடத்தில் பிரபல பாலிவுட் நட்சத்திரத்தை நடிக்கவைக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்றுவருவதாக கூறப்படுகின்றது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தனுஷை வைத்து கௌதம் இயக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தொடங்கும் என எதிர்ப்பாக்கபடுகின்றது.
இந்த படத்தையாவது சரியான நேரத்துல முடிப்பீங்களா சார்…?
Patrikai.com official YouTube Channel