சினிமாவில் நடிப்பதைத் தவிர மற்ற எல்லா வேலைகளிலும் கவனமாக இருப்பார் சிம்பு. எப்படியோ போனால் போகிறதென்று, “அச்சம் என்பது மடமையடா” படத்தை முடித்துக்கொடுத்தார்.
படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான கவுதம் மேனன் “அப்பாடா” என்று நிம்மதி பெருமூச்சு விட்டு படத்தை கடந்த 11ம் தேதி ரிலீஸ் செய்தார்.
ஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும் “கடவுள் இருக்கான் குமாரு” படமும் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் “நோட்டு செல்லாது” அறிவிப்பால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் 18ம் தேதி வெளியானது.
இந்த நிலையில் ஜி.வி. பிரகாஷ் தனது, ட்விட்டர் பக்கத்தில், “க.இ.குமாரு படத்துக்கு மாஸ் ஓப்பனிங்க.. பிளாக் பஸ்டர்..” என்றெல்லாம் எழுதித்தள்ளினார்.
ஏதோ எழுதட்டும் என்று இருக்க, சிம்பு என்ன சாதாரண ஆளா?
தனது ட்விட்டர் பக்கத்தில், சிம்பு, “மோசமான பிளாப் படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் என்றால்… அச்சம் என்பது மடமையடாவை என்னென்னு சொல்லுவது ? என்ன ரிசல்ட் ன்னு நாம் சொல்லாமல், மகிழ்ச்சின்னு சொல்லுவோம் ’ என்று பதிவிட்டார்.
இதைப் பார்த்த ஜி.வி. பிரகாஷ், சிம்புவைப் பற்றி காட்டமாக விமர்சித்து வருகிறாராம். இப்போது பதிலுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்புவை என்ன சொல்லி விமர்சிக்கப்போகிறார் என எதிர்பார்த்து காத்திருக்கிறது திரையுலகம்!