டில்லி,
நாளை முதல் இந்தியா முழுவதும் உள்ள பிக் பஜார் ஷாப்பிங்கிலும் டெபிட் கார்டு மூலம் பணம் பெறலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
கடந்த 8ந்தேதி நோட்டு செல்லாது என்று மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தங்களின் தேவைக்கான பணம், மற்றும் பொருட்கள் வாங்க சிரம பட்டு வருகின்றனர். 15 நாட்களுக்கு மேலாகியும் இன்றுவரை பணப்புழக்கம் சரியாகவில்லை.
ஒரு ஒரு நாளும் வேளைக்கு செல்பவர்கள் முதல், முதியோர் வரை வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்து வருகின்றனர், எடிஎம் களில், பணம் நிரப்ப பட்ட அரை மணி நேரத்திலேயே தீர்ந்து விடுவதால் இன்று வரை பண புழக்கம் சகஜ நிலைக்கு திரும்பவில்லை.
மேலும் மத்திய அரசு அறிவித்தபடி புதிய 500 ரூபாய் நோட்டுகளும் இன்னும் விநியோகம் செய்யப்படவில்லை.
இதுபோன்ற சூழ்நிலையில் நாடு முழுவதும் உள்ள 2500 பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 டெபிட் கார்டு மூலம் வாங்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
தற்போது,பியுச்சர் குரூப் எனப்படும் கம்பெனிக்கு சொந்தமான பிக் பஜார் ரிடெய்ல் ஷோரூமிலும் டெபிட் கார்டு கொடுத்து ரூ.2000 வரை பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நவம்பர் 24ம் தேதி (நாளை) முதல் பிக் பஜாரில் டெபிட் கார்L மூலம் ரூ.2000 பெறும் வசதி நடைமுறைக்கு வருகிறது.