அரசு அலுவல் மொழிகள் சட்டம் 1963-இன் கீழ் புதிய 2000 ரூபாய் நோட்டில் இருக்கும் தேவநகரி எழுத்து சட்டவிரோதமானது எனவே இந்த நோட்டை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று திமுக பிரமுகர் கேபிடி கணேசன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்குக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

devnagri

அந்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டதாவது, இந்தியில் எண்களுக்கு தேவநகரி எழுத்துக்களை பயன்படுத்துவது வழக்கம். மத்திய ஆட்சி மொழிகளுள் ஒன்றாக இந்தி இருந்தாலும், எண்களை பொறுத்தவரை சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடிவங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது சட்டம். தேவநகரி எண்களை பயன்படுத்த வேண்டும் என்றால் முறையாக நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவேண்டும். ஆனால் அப்படி எனுமதி எதுவும் பெறாத நிலையில் தேவநகரி எழுத்துக்களை பயன்படுத்தியிருப்பது சட்டவிரோதமானது. எனவே இந்த 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி இதற்கு அரசு தரப்பு விளக்கம் கோரியபோது, “இது வெறும் டிசைன் மட்டுமே!” என்று மத்திய அரசு பதிலளித்தது. இந்த பதிலை ஏற்காத நீதிமன்றம் வழக்கை வரும் நவம்பர் 28-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.