unnamed

சென்னை:  தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வெளியானது. இந்த விருது பட்டியிலில் இருக்கும் ஒருவர், திருமதி ஜெ. ஜெயலலிதா.

பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய மாநில அரசுகள் விருது வழங்கி கௌரவிக்கின்றன. ஆசிரியராக இருந்து குடியரசுத்தலைவராக உயர்ந்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

இவ்விருது பெற இருபது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி இருக்க வேண்டும். மேலும், சமுதாயத்தில் கண்ணியமானவராகவும், புகழ்மிக்கவராகவும் இருத்தல் வேண்டும். மாணவர்களிடத்தில் அன்பு மிக்கவராகவும், சமுதாய நலனில் பங்கு கொள்பவராகவும் இருத்தல் வேண்டும்

இந்த வருடம் நல்லாசிரயர் விருது பெற்றவர்களில் ஒருவர் திருமதி ஜெ. ஜெயலலிதா ஆவார். இவர்,  தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகில் திருவாய்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையைாக பணியாற்றுகிறார்.
தமிழக முதல்வர் பெயரோடு, இனிஷியலும் அப்படியே இருப்பதால், இவரது நெருங்கிய தோழிகள் செல்லமாக “சி.எம்.” என்றுதான் அழைப்பார்களாம்!

“படிப்பீர்களா.. நீங்கள்.. படிப்பீர்களா” என்று மாணவர்களை கெடுபிடியாக கேட்பாரா என்று மட்டும் தெரியவில்லை!

எப்படியோ.. முதல்வர் ஜெ. ஜெயலலிதா கையால்,  ஆசிரியை ஜெ. ஜெயலலிதா விருது வாங்கப்போகிறார்!