1

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவலங்களை சித்தரிக்கும் முற்போக்கு எழுத்தாளர் டி செல்வராஜின் தேநீர் நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சி. இசையமைக்க நம் ராஜாவை அணுகுகின்றனர்.

“ராஜா…நாங்க தேநீர் படம் எடுக்கிறோம். ஜெயபாரதிதான் டைரக்டர். நீதான் இசை.”
“இல்லை. நான் இப்போது ஏகப்பட்ட படங்கள் பண்றேன்..எனக்கு நேரமே பத்தலே…அமரன் பண்ணட்டும்.”

”நான் கேட்டும் மாட்டேங்கறே…நீங்க சாப்பாட்டுக்கே இல்லாம கஷ்டப்பட்டபோது கட்சிதான் (சிபிஎம்) உங்க அண்ணனுக்கு ஆதரவா இருந்ததை மறந்துட்டு பேசறே…தோழர்கள் தயாரிக்கற படத்துக்கு இசையமைக்கறது உன் கடமை!”

“நான் ஜெயபாரதிகிட்டே பேசிக்கிறேன்” என்று கூறிவிட்டு என்னைத் தனியாக அழைத்துப்போனார் இளையராஜா.

“பார்த்தீங்களா ஜெயபாரதி…இடம் பொருள் எதுவும் பார்க்காம ஸ்டூடியோவுக்குள் வந்து எப்படிப் பேசறார்? வேண்டாம் ஜெயபாரதி…நானும் படத்தை டைரக்ட் பண்ணமாட்டேன்னு மறுத்திடுங்க…நிச்சயம் அடுத்தப் படத்துக்கான வாய்ப்பு நிச்சயம் வரும். நீங்க இவங்க தயாரிக்கப்போற படத்தை டைரக்ட் பண்ணினா ஒங்க கையில அரிவாள் சுத்தியை கொடுத்திடுவாங்க…இசையமைப்பாளர் எம் பி சீனிவாசனுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும்…”

“அறிவிருக்கா பிரச்சினை”க்குப் பிறகு அவசர அவசரமாக வெளியிடப்பட்டதல்ல ஜெயபாரதியின் சிறு நூல். கடந்த ஆண்டே வந்திருக்கிறது. தற்செயலாக நேற்று முன் தினம் இந்து தமிழ்நாளேட்டில் இப்புத்தகத்தின் விமர்சனம் வெளியாகி அதில் ஒரு வரி ராஜாவைப் பற்றி இருந்தது. கர்ம சிரத்தையாக டிஸ்கவரி பேலஸ் சென்று வாங்கி வந்து நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன். என் கடமை உணர்ச்சியை எல்லோரும் பாராட்டுவீர்கள் எனவும் நம்புகிறேன்!

முகநூலில்..   Gopalan TN

(பின் குறிப்பு: மறுப்பது இளையாராஜாவின் உரிமை என்று நினைப்பவர்கள்,  இளையராஜாவின் பழைய கால அனுபவங்களை தெரிந்தவரிடம் கேட்டு  அறிந்துகொள்ளுங்கள்.  அல்லது இந்த புத்தகத்தை முழுதும் படியுங்கள். இளையாராஜா விசயம் தவிர வேறு பல அறிய வேண்டிய சங்கதிகள் உள்ளன.

புத்தகத்தை வாங்க:  டிஸ்கவரி புக் பேலஸ் பி.லிட், சென்னை. ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000023800.html)