டோயோட்டா நிறுவன சேர்மன் டகேஷி உச்சியமடா சமீபத்தில் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது, “இந்தியாவில்,டோயோட்டா நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் மிகவும் பின்தங்கியுள்ளதே அது ஏன்? அதை உயர்த்த என்ன திட்டங்களை வைத்துள்ளீர்கள்?”என்று ஒரு கேள்வி டகேஷி உச்சியமடா விடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் தந்துள்ள பதில்:
“நீங்கள் சொல்வது உண்மைதான்.மார்க்கெட் ஷேர்களை அதிகப்படுத்த-விலை குறைந்த கார்களை அதிகம் தயாரித்து,விற்று, அதன் மூலம் மார்க்கெட் ஷேர்களை அதிகப்படுத்தலாம் தான்.ஆனால் அது எங்கள் நிறுவனத்திற்கு தேவையில்லை.நாங்கள் டோயோட்டா போன்ற ஒரு தரமிக்க நிறுவனத்திடமிருந்து எம்மாதிரியான தயாரிப்புக்களை வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்களோ,அதை மட்டுமே தர விரும்புகிறோம்.
விலை குறைந்த கார்கள் அதிகம் விற்கிறது என்பதற்காகவும், மார்க்கெட் ஷேரை அதிகப்படுத்துவதற்காகவும்,விலையைக் குறைத்து-தரத்தைக் குறைத்து இறுதியில் எங்கள் நிறுவனத்தின் பெயரையும் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை.”
மார்க்கெட் ஷேர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.அதற்காக எங்கள் தரத்தை ஒருநாளும் குறைத்துக் கொள்ள மாட்டோம் என்ற இந்த உறுதி-டோயோட்டா மட்டுமல்ல ஒட்டு மொத்த ஜப்பானியர்களின் உறுதி.இதுவே அவர்களது வியாபார உத்தியும் கூட….!