q

ஞ்சாவூரின் சிறப்புகள்ள ஒன்னு, “அசோகா அல்வா”. இது வேறு பகுதிகள்ள செய்யப்படறதில்ல. அதுவும்  திருவையாறு கடைகள்ல செய்யப்படற அசோகா அல்வாவுக்கு தனி சுவை உண்டு. அதுவும் இந்த மழைக்காலத்தில் சூடாக அசோகா அல்வாவை சாப்பிட்டால்.. ஆஹா..!

சரி, இந்த அசோகா அல்வா  செய்யும் முறை யை பார்ப்போம்:‪‎

தேவையான பொருட்கள்: கோதுமைமாவு:200கிராம்  பயத்தம்பருப்பு:50 கிராம், சர்க்கரை:400கிராம், நெய்:100கிராம், முந்திரிபருப்பு:5, ஏலக்காய்:3, ஃபுட்கலர்:தேவையான அளவு,

செய்முறை: முதலில் பயத்தம்பருப்பை குக்கரில் நன்கு வேகவைத்து தனியே வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி முந்திரிப் பருப்பை வறுத்து  எடுத்துவைத்துக் கொள்ளவும். அதே நெய்யில் கோதுமை மாவை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர் கோதுமை மாவு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி  வேக வைக்கவும்.

கோதுமை நன்கு வெந்ததும்,வேகவைத்த பயத்தம்பருப்பு, நெய் கலந்து, இந்த கலவை நன்கு சுருண்டுவரும் வரை கிண்டிக்கொண்டே இருக்கவும். இதன்மேல் சர்க்கரையை கலக்கவும்.ஒரு சிறிய கரண்டி பாலில் ஃபுட் கலரை சேர்த்து வைத்துக்கொள்ளவும்.

அசோகா கலவை நல்ல பதத்திற்கு வந்தவுடன், இந்தஃபுட்கலர் கலந்த பாலை ஊற்றி நன்கு கிளறவும். வறுத்து வைத்த முந்திரிபருப்பு, பொடித்து வைத்த ஏலக்காய் ஆகியவற்றைமேலே தூவி பரிமாறவும்.

சுவையான அசோகா அல்வா தயார்!

  • யாழனி