Tamil_Daily_News_2395702600480
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாக கடைபிடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது.

முந்தைய காலத்தைவிட தற்போது பெண்களுக்கு, சமுதாயத்தில் ஓரளவு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றாலும் அவர்கள் மீதான வன்முறைகளும் தொடரத்தான் செய்கின்றன.

பாலியல் கொடுமை, குடும்ப வன்முறை, போர், கலவரம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.
உலக அளவில் மூன்றில் ஒரு பெண், தங்களது வாழ்நாளில் கொடுமையான வன்முறைக்கு ஆளாகிறார். இவற்றை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டிய நாள் இது.