
தற்போது “கபாலி” படத்தின் ஷூட்டிங்கிற்காக மலேசியாவில் இருக்கிறார் ரஜினி. இதற்கிடையே அவர் ஷங்கர் டைரக்ஷனில் நடிக்கும் “எந்திரன் 2′ படத்துக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் ஷங்கர்.
ஒரு பக்கம் ஸ்கிரிப்ட் மெருகேற்றப்பட.. இன்னொரு பக்கம் எப்படி எல்லாம் கிராஃபிக்ஸில் கலக்கலாம் என்று இன்னாரு டீம் மூளையை கசக்கிக்காண்டிருக்கிறது.
இந்த நிலையில், “எந்திரன் 2 படத்துக்காக ரஜினிக்கு அடுத்த மாதம் மேக்கப் டெஸ்ட் சென்னையில் நடக்க இருக்கிறது” என்று தகவல் பரவ.. ஆளாளுக்கு, “இதுதான் ரஜினி கெட் அப்” என்று தாங்களே உருவாக்கி சமூகவலைதளங்களில் பரவவிடுவதும் ஆரம்பமாகியிருக்கிறது.
அதில் சிலர் கிண்டலாக ரஜினியை கிராபிக்ஸ் செய்து, ரஜினி ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார்கள்.
அதில் ஒன்றுதான் இந்த படம்!
[youtube-feed feed=1]