நியூயார்க்:
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, மேற்கத்திய நாடுகளில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க நாட்டின் சிகாகோவில் நேற்று ஒரு சீக்கியரை, அமெரிக்கர்கள் சிலர் கடுமையாக தாக்கினர். அவருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தது.
தாக்கியவர்களைப் பிடித்த போலீசார் அவர்களை விசாரித்தனர். அவர்கள், “குறிப்பிட்ட நபர் தாடி வைத்திருந்ததால் இசுலாமியர் என்று நினைத்து தாக்கினோம்” என்றார்கள்.
“மத ரீதியான தாககுதல் என்பதை ஏற்க முடியாது. அதுவும் முன்னேறிய நாடு, மனித உரிமைகளை மதிக்கும் நாடு என்று தன்னை பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் அமெரிக்காவில் மத ரீதியான தாக்குதல் என்பதே ஏற்கவே முடியாதது. இந்த நிலையில் இசுலாமியருக்கும், சீக்கியருக்கும் வித்தியாசம் தெரியாத நிலையில்தான் அறிவார்ந்த அமெரிக்கர்கள் இருக்கிறார்கள்” என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.