
‘க க க போ’ படத்தை புதுமுக இயக்குனர் விஜய் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் கதாநாயகனாக புதுமுகம் கேசவன் மற்ற முக்கிய பாத்திரங்களில் பவர் ஸ்டார்; ரோபோ ஷங்கர் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். நாயகியாக சாக்ஷி அகர்வால் நடிக்கிறார்.

இந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் மலேசியா சென்றார் நாயகன் கேசவன். அப்போது அங்கு நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். எதிர்பாராத விதமாக கேசவன் விழுந்துவிட்டார். அவரது உடல் கிடைக்கவில்லை. ஆனால் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Patrikai.com official YouTube Channel