“மோடி” என்ற நமது சாதிப்பெயரை உங்கள் பெயருடன் சேர்த்து வைத்துக்கொண்டால் நாம் 14 கோடிப்பேரைக் கொண்ட தனிப்பெரும் சக்தியாக நாட்டில் உருவெடுத்து நிற்ப்போம். என்று பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி தனது சாதி சங்கமான “டெலி சமாஜ்” உறுப்பினர்களிடையே பேசும்போது தெரிவித்தார்.

modibrother

நரேந்திரமோடி இந்திய நாட்டின் பெருமைக்குரிய அடையாளமாக இருக்கையில் நாம் நமது “மோடி” என்ற சாதிப்பெயரை உங்கள் பெயருடன் சேர்த்து வைத்துக்கொள்வதில் என்ன வெட்கம்? சாகூ, செளகான், பார்மர், ராத்தோட் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய சமூகங்களை சேர்ந்த தலைவர்களெல்லாம் தங்கள் சுயநலத்துக்காக தங்கள் சாதிப்பெயரை தங்கள் பெயருடன் இணைத்துக் கொள்கிறார்கள். கர்மாதேவியின் குழந்தைகளான நாம் டெலி என்றும், மோடி என்றும் அழைக்கப்பட ஏன் வெட்கப்பட வேண்டும்?
அரசியல் கட்சிகள் நம்மை முட்டாளாக்கி பிரித்து வைத்திருக்கின்றன. நாம் நமது சாதிப்பெயரை நமது பெயர்களுடன் சேர்த்துக்கொண்டால் நாம் 14 கோடிப்பேரைக் கொண்ட தனிப்பெரும் சக்தியாக நாட்டில் உருவெடுத்து நிற்ப்போம் என்று பிரஹலாத் மோடி குறிப்பிட்டார்.