மும்பை:
ஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷு பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘2.0’.
நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஏ.ஆ.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தத் திரைப்படத்தை சுமார் 350 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறது லைக்கா நிறுவனம்.
இந்தத்திரைப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டுவிழா மும்பையில் நடந்தது.
விழாவில் இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் அக்‌ஷய்குமார் ஆகியோரிடம்  தொகுப்பாளர் கரண் ஜோஹர் சில கேள்விகளை எழுப்பினார்.
அப்போது இயக்குநர் ஷங்கர், “‘எந்திரன்’ படத்தில் நான் செய்ததையே மேலும் சிறப்பான முறையில் செய்ய வேண்டிய கட்டாயம்.
‘எந்திரன்’ திரைப்படம் இமயமலை ஏறுவது போன்றது. ஆனால் ‘2.0’ திரைப்படம் தோளில் இருக்கும் ஒரு இமயமலையைப் போன்று இருந்தது. கண்டிப்பாக இந்தப் படத்தின் மூன்றாம் பாகத்தையும் எடுப்பேன்”  என்று தெரிவித்தார்.
00
அக்‌ஷய்குமார் பேசும் போது, “என்னுடைய திரையுலக வாழ்வில் நான் மேக்கப் போட்டதில்லை. ஆனால், ‘2.0’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்காக நீண்ட நேரம் அமர்ந்து மேக்கப் போட்டேன். அதனை மறக்கவே முடியாது. கண்டிப்பாக ‘2.0’ திரைப்படம் இந்தியத் திரையுலகில் சாதனை படைக்கும் படமாக இருக்கும். ரஜினி சாருக்கு என தனி ஸ்டைல் இருக்கிறது. எல்லோருமே அவரிடமிருந்து, எப்படி அவர் உடை, கண்ணாடி உள்ளிட்டவை அணிவதை கற்றுக் கொள்ள வேண்டும் ” என்றார்.
ரஜினிகாந்த் பேசும் போது, “இயக்குநர் ஷங்கரிடம் பணியாற்றுவது மிகவும் சிரமம். காட்சிகள் துல்லியமாக வரவேண்டும் என்பதற்காக மிகவும் மெனக்கெடுவார். அதே துல்லியத்தை எல்லோரிடமும் எதிர்பார்ப்பார்.
இந்த ‘2.0’ திரைப்படம் 3டியில் உருவாகிறது. அதே போல இப்படத்தின் நாயகன் நான் அல்ல. அக்‌ஷய்குமார் தான்.
இந்தப்படம் கண்டிப்பாக ஒட்டுமொத்த இந்திய சினிமாவே பெருமிதப் படக்கூடிய படைப்பாக ஹாலிவுட் தரத்துக்கு இருக்கும்.
என்னுடைய ஒவ்வொரு படமும் வெளியாகும்போது, கடவுளின் அருளாலும், ரசிகர்களின் ஆதரவாலும் திருவிழாவாக அமைந்துவிடுகிறது.
சல்மான் கான் தயார் என்றால் அவரோடு நடிக்க தயாராக இருக்கிறேன்.” என்று ரஜினி பேசினார்.
இவ்விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அரங்கில் நுழைந்தார் இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் சல்மான்கான்.
அவர், “ரஜினி சார் இங்கு இருக்கிறார் என்று தெரிந்தவுடன், என்னை அழைக்காமலே தலைவர் ரஜினி சாரை சந்திக்க வந்தேன். அவர் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. ‘2.0’ பர்ஸ்ட் லுக் பிரமாதமாக இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் எப்போதுமே பெரிதாக சிந்திக்கக் கூடியவர” என்று பேசினார்.