12241538_978563602201943_3649176295850502195_n

ஜான் எஃப். கென்னடி ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவராக 1961 முதல் 1963 வரை அவர் கொலை செய்யப்படும் வரை இருந்தவர்.

இரண்டாம் உலகப் போரின் போது தென்மேற்கு பசிபிக் பகுதியில் கடற்படைக் கப்பலில் லெப்டினண்டாகப் பணிபுரிந்த இவர், போரின் முடிவில் அவர் அரசியல் பக்ககம் வந்தார்.

மசாசுசெட்ஸ் மாநிலத்திற்கு 1947 முதல் 1953 வரை அமெரிக்க கீழவை உறுப்பினராக ஜனநாயகக் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு, மேலவை (செனட்) உறுப்பினராக 1953 முதல் 1961 வரை பதவி வகித்தார். 1960 இல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் உதவி ஜனாதிபதியும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான ரிச்சார்ட் நிக்சனை வென்றார்.

 

சுடப்பட்ட பின்..
சுடப்பட்ட பின்..

புலிட்சர் விருது பெற்ற ஒரேயொரு அமெரிக்கத் தலைவர் இவர்தான்.. இவரது அரசு கியூபாவின் ஏவுகணை விவகாரம், பேர்லின் சுவர் கட்டப்பட்டது, விண்வெளி ஆய்வுப் போட்டி, அமெரிக்க குடியுரிமை விவகாரம் வியட்நாம் போர் துவக்கம் போன்ற பிரச்சினைக்குரிய நிகழ்வுகளைச் சந்தித்தது.

நவம்பர் 22, 1963 இல் டெக்சாஸ், டல்லாஸ் நகரில் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்ற நபர், கொலை செய்ததாக கைதானார்.

ஆனால் இவர் இரண்டு நாட்களில் நீதிமன்ற விசாரணையின் போதே ஜாக் ரூபி என்பவரால் கொல்லப்பட்டார். இந்த கொலை குறித்து விசாரணை நடத்திய வாரன் கமிஷன், தீர்மானமான முடிவு எதையும் அறிவிக்கவில்லை. 1979 இல் அரசியல் கொலைகளை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட கீழவை சிறப்பு விசாரணைக் குழு, கென்னடி கொலை செய்யப்பட்டதில் அரசியல் பின்னணி இருந்திருக்கலாம் என்று மட்டும் தெரிவித்தது. மற்றபடி கொலைக்கான பின்னணி இதுவரையில் அறியப்படாத மர்மமாகவே இருக்கிறது.