தூங்காவனம் படம் த்ரிஷாவுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இதுவரை வெறும் அழகு பொம்மையாக வந்து போனவர், முதல் முறையாக அதிரடி கதாபாத்திரத்தில் நடித்து பெயர் வாங்கியிருக்கிறார். இது அவரது ஐம்பாவது படமாக அமைந்தது அவருக்கு கூடுதல் மகிழ்ச்சி.
ஆனால் தூங்காவனம் தெலுங்கு பதிப்பு விழாவில் த்ரிஷாவுக்கு ஒரு நெருடல். இந்த படத்தின் முதல் காட்சி வி.ஐ.பிகளுக்காக திரையிடப்பட்டது.
இதில் உற்சாகமாக கலந்துகொண்ட த்ரிஷா திடுமென டல் ஆணார். அதற்குக் காரணம், தெலுங்கு நடிகர் ராணாவின் வருகை. அதுவரை புன்னகையுடன் எல்லாோரிடமும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தவர், ராணாவைப் பார்த்ததும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு ஒதுங்கிவிட்டார்.
த்ரிஷாவும், ராணாவும் காதலித்தது சிதம்பர ரகசியம். ஆனல் இந்த காதலும் தோல்வியில் முடிந்தது. பிறகுதான் வருன் மணியன் என்பவருடன் த்ரிஷாவுக்கு நிச்சயமாகி அந்த திருமணம் தடைபட்டது.
இதற்கிடையே ராணாவுக்கும் அனுஷ்காவுக்கும் காதல் என்று தகவல் பரவியது.
இதனால்தான் த்ரிஷா, ராணாவைப் பார்த்து ஒதுங்கினாராம். ஆனால் ராணாவோ, “இதுவரைக்கும் என் மனசுல யாரும் இல்லே.. பிரிஞ்சாலும் ஃப்ரண்டா பழகக்கூடாதா.. இப்படி என்னை ஒதுக்கிவிட்டாரே த்ரிஷா” என்று புலம்புகிறாராம்.
ராணா மனசை ரணப்படுத்தலாமா த்ரிஷா?