rjbalaji
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் வருகின்றார் என்றால் நடிகர் நடிகைகள் எல்லோருக்கும் ஒரு பயம் கலந்த மரியாதை இருக்கும் காரணம் நம் திரைப்படத்தை பற்றி நல்லபடியாக எழுத வேண்டும் முக்கியமாக நம்மை பற்றி எழுத வேண்டும் என்பதனால்.
இப்படி இருந்த காலம் போய் பத்திரிக்கையாளர் வருகின்றார் என்றால் இன்றைக்கு நடிகர் நடிகைகள் எல்லோரும் தலைதெறிக்க ஓடுகின்றனர் காரணம் இன்றைக்கு கையில் ஸ்மார்ட்போன் உள்ளவர்கள் எல்லோரும் நான் பத்திரிக்கையாளன் என்று மார்தட்டிக் கொள்வது தான்.
ஒரு ஃபோன் மற்றும் நெட்பேக் இருந்தால் போதும் நான் ஃப்ரிலான்சர் நிருபராக உள்ளேன் என்கின்றார்கள், அப்படி எதில் வேலை செய்கின்றீர்கள் என்று கேட்டால் போஸ்புக், ட்விட்டரில் செய்திகளை பகிர்வேன் என்கிறார்கள் இதை போன்றவர்களுக்கு பல சினிமா நட்சத்திரங்களும் உடந்தையாகத்தான் உள்ளனர்.
நிஜ பத்திரிக்கையாளர்களுக்கு முக்கியத்துவமும் மரியாதையும் இல்லாத இந்த காலத்தில் நேற்று ஒரு நபர் டுவிட்டரில் “கடவுள் இருக்கான் குமாரு: திரைப்படம் ரிலீஸ் ஆகாத போது, படத்தின் முதல் விமர்சனம் என்று ஒரு பதிவு சமூக வலை தளத்தில் வந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த பாலாஜி ‘ஒரு ட்வீட் பண்ணியுள்ளார் அவர் கூறியதாவது :-
“அடப்பாவிங்களா..! முதல் விமர்சனமா.? இன்னும் படமே ரிலீஸ் ஆகல..! ரிலீஸ் ஆகாத படத்துக்கு பாக்காம விமர்சனமெல்லாம ரொம்ப ஓவர் டா”
rj-balaji
என்று அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.