நெட்டிசன்:
கார்த்திக் ராமசாமி (Karthick Ramasamy) அவர்களின் முகநூல் பதிவு:
இதுவரை நாட்டில் ஒரு 10% பேர் வரி ஏய்ப்பு செய்தும்,லஞ்சம் வாங்கியும் தவறு செய்து கொண்டிருந்திருப்பார்கள்.
மிகப் பெரும்பாலோனோர் மாதச்சம்பளம் வாங்கிக்கொண்டும், தினக்கூலியிலும்
இதுவரை ஒரு பொருளாதாரக்குற்றமும் தங்களது வாழ்நாளில் செய்யாதவர்களாகவே இருந்திருப்ப்பர்.
இனி வேறு வழியில்லாமல் இந்த 10% பெருமுதலைகள் புரோக்கர்களின் உதவியுடன் இந்த பெரும்பாலானவர்களை தொடர்பு கொள்வர். தவறு செய்வதற்கு வாய்ப்பில்லாத காரணத்தினால் நல்லவர்களாக இருந்தவர்கள் ஏன் சும்மா வருகிற பணத்தை விடுவானேன் என்று அதற்கு துணை போவர்.
ஒரு ஏக்கர் வைத்திருக்கிற ஒவ்வொரு விவாசாயியும் எனக்கு ஒரு கோடி விவசாயத்தின் மூலம் வந்தது என்று கணக்கு காண்பிப்பது நடக்கும்.
ஹைதராபாத்த் திராட்சைத்தோட்டத்த்தில் விவாசாயம் செய்து எனக்கு இத்தனை கோடி பணம் வந்தது என்ற கணக்கை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்ட வரலாறு உள்ளது.
வறண்ட மகாராஷ்டிர விவசாய நிலத்தில், சரத்பவார் மகள் தனக்கு பலகோடி விவசாயத்தின் மூலம் வந்தது என்று கணக்கு காட்டியதும் அனைவருக்கும் தெரியும்.
கருப்பு பணத்தின் சிறு பகுதி சாதாரண மக்களுக்கும், பெரும்பகுதி மீண்டும் 2000ம் ரூபாய் நோட்டுக்களாக அதே பெரு முதலைகளை சென்றடையும். பிறகு சாவகாசமாக அவர்கள் அதை ஹவாலா மூலமாக வெளிநாட்டிற்கு அனுப்புவர்.
தவறே செய்யாத சாதாரண மக்களை தவறு செய்ய வைத்து, கொஞ்ச நஞ்சம் அவர்களுக்கு இருந்த குற்ற உணர்ச்சியையும் போக்க வைத்து அவர்களை பேராசைக்கார்களாக மாற்றப்போகிறார்கள்.
குறந்தது 15% கருப்பு பணம் சாதாராண மக்களை சென்றடையும்.
பணப்புழக்கம் அதிகரித்து பணத்தின் மதிப்பு குறையும். அதாவது ஹவே அருகில் சென்னைக்கு மிக அருகில் 150 கிமீ தொலைவில் உள்ள கட்டாந்தரைகள் கூட மிக அதிக மடங்கு விலை ஏறும்.
பேருக்கு ஒரு கம்பெனி register செய்து எந்த பரிவர்த்தனைகளும் செய்யாத அத்தனை சிறு நிறுவனங்களின் current account களிலும் அடுத்த 50 நாட்களுக்கு பரிவர்த்தனைகள் புயல் வேகத்தில் நடக்கும். கோடிக்கணக்கான current account வங்கி கணக்குகளை audit செய்வது நடைமுறையில் சாத்தியமே இல்லாதது. அப்படியே செய்தாலும் அத்தனை வழக்குகளை போட்டு நிரூபிக்க 50 வருடங்களுக்கு மேல் ஆகும்.
வியாபாரிகள், லோக்கல் பெருமுதலைகள் வங்கி அதிகாரிகளை influence செய்து அவர்களின் பெரும்பாலன நேர்த்தை எடுத்துக்கொள்வர். சாதாரண மக்கள் வெய்யிலில் வரிசையில் நிற்பர்.
ATM களில் ஏற்கனவே கூட்டம் அலை மோதிகிறது.
கையில் இருக்கிற 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பெட்ரோல் போட்டாவது செலவழித்து விடலாம் என பலரும் நினைப்பதால் அநேகமாக நாளை பெரும்பாலான பங்குகளில் பெட்ரோல் டீசல் காலியாகயிருக்கும். மருத்துவமனைக்கு அவசரமாக செல்ல நினைப்பவர்கள் கூட பெட்ரோல் போட வழியில்லாமல் தவிர்ப்பர்.
ஆள் பலம் உள்ள சாதிக்கட்சிகளின் லோக்கல் தலைவர்களுக்கான டிமாண்ட் அதிகரிக்கும்.
வருமான வரி கட்டாதவர்கள், கணக்கு சமர்ப்பிக்காதவர்கள், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மீதான வழக்குகள் என ஒரு 10 லட்சம் பேர் மீது வழக்கு இருந்தால் அது கோடி கணக்கில் அதிகரிக்கும். பிறகு அந்த மாதிரியான வழக்குகளுக்கு யாரும் பயப்பட மாட்டார்கள். கோர்ட்டில் இருந்து சம்மன் வரவே பல வருடங்கள் ஆகலாம்.
அம்பானி, அதானி யாரும் இந்தியாவில் பணத்தை மூட்டை கட்டி வைத்திருக்கவில்லை. அவர்கள் விரும்பினால் அவர்களின் நிறுவனங்களுக்காக ரிசர்வ் பேங்கின் பின்கதவுகள் மல்லாக்காகத் திறந்து கொண்டு நூறு ரூபாயாகவும், இரண்டாயிரம் ரூபாயாகவும் மூட்டை மூட்டையாக கொட்டும்.
அவர்களின் கருப்புப் பணங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கின்றன. ‘அந்த வெளிநாட்டு கருப்புப் பணத்தை ஏன் மீட்டு வரவில்லை? என்னாச்சு தேர்தல் வாக்குறுதி? எங்கே தலைக்கு 15 லட்சம்?’ என்று தன்னுடைய முதலாளிகளின் அடிமடியில் கையை வைக்கப் பார்க்கும் விமர்சனங்களுக்குப் பதிலடியாகத் தந்திரோபாய காய் நகர்த்தலாக செய்யப்பட்டிருப்பதுதான் இந்த உள்நாட்டு சிறு முதலாளிகளின் பணப்பையை சற்றே அசைத்துப் பார்க்கும் அதிரடி அறிவிப்பு. இது தோல்வியடைந்தாலும் இனி யாரும் கருப்புப் பணத்துக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் மோடி என்று கேட்க முடியாது. கேட்பவர்களைப் பக்தர்கள் பாய்ந்து பிறாண்டி கடித்து குதறி பார்த்துக் கொள்வார்கள். அம்பானி, அதானி, அமிதாப் பச்சன்களின் ஸ்விஸ் பேப்பர்ஸ், பனாமா பேப்பர்ஸ் மறக்கடிப்பட்டு விடும். குறைந்தபட்சம் வாயடைக்கச் செய்யப்பட்டு விடும். அதி புத்திசாலித்தனமான முதலாளிகளுக்கு விசுவாசமான குள்ளநரி திட்டம் தான் இது .
நாடு இந்த கோமாளி கிரிமினல்களின் கையில் மாட்டிக்கொண்டு அல்லோகலப்பட்டுக்கொண்டிருக்கிறது.
வரலாற்றில் நவீன இந்தியாவின் துக்ளக் என மோடி அழைக்கப்படுவார்.