16-ration-card-600-jpg

ரேசன் கார்டு பெறுவது எப்படி ?

நாம் இந்த நாட்டின் குடிமகன் என்பதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது ரேசன் கார்டுதான். அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில் வாங்க மட்டுமின்றி வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நம்மை அடையாளப்படுத்த அவசியமானது ரேசன் கார்டு.

இதைப் பெறஉவதற்கான விண்ணப்பங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும். தவிர, http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு தளத்திலும் உண்டு. இதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தாலுகா அலுவலங்களில் உள்ள வட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி [ TSO ] யிடம் அளிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள்..
1. இருப்பிட சான்று

2. தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை

3. வீட்டு வரி / மின்சார கட்டணம் செலுத்திய / தொலைப்பேசி கட்டண போன்றவைகளின் ஏதாவது ஒரு ரசீதுகள் / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் / பாஸ்போர்ட் நகல் [ இதில் ஏதாவது ஓன்று மட்டும் ]

4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கு அதிகாரியிடம் [ TSO ] பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.

5. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான ‘குடும்ப அட்டை இல்லா’ சான்று.

6. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.

7. சுய முகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை
8. கட்டணணாக, உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஐந்து ரூபாய் செலுத்த வேண்டும்.

.விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண்ணை தேதி, அலுவலக முத்திரையுடன் பெற்றுக்கொள்ள வேண்டும். இதனால் உங்கள் மனு எந்த நிலையில் இருக்கிறது என்பதை அலுவலரிடம் கேட்டு அறியலாம்.