இந்தியாவில் சீனப்பூண்டு இறக்குமதிக்கு தடை இருக்கிறது. ஆனாலும் அதையும் மீறி சீனப்பூண்டுகள் இங்கே விற்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க சந்தைகளைஆக்கிரமித்திருக்கும் சீனப்பூண்டுகளால் ஏற்படும் அபாயம் குறித்து அமெரிக்காவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

garlic

அமெரிக்கா கடந்த ஆண்டு மட்டும் 138 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான் சீன பூண்டுகளை இறக்குமதி செய்திருக்கிறது, “பூண்டுகளின் தலைநகரம்” என்றழைக்கப்படும் கலிஃபோர்னியாவிலிருந்து வரும் பூண்டுகளைத்தான் வாங்கிச் செல்கிறோம் என்று பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவை உண்மையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.
சரி, சீனப் பூண்டுகளில் அப்படி என்னதான் பிரச்சனை?
ஆஸ்திரேலிய நிபுணர் ஹென்றி பெல் சொல்லும் விளக்கத்தை பார்ப்போம், சீனப்பூண்டுகள் அழகாக வெள்ளை நிறத்தில் பளபளவென மின்னும், பார்ப்பதற்கு அழகாயிருக்கும். அதற்கு காரணம் அவை ரசாயனப் பொருட்களைக் கொண்டு ப்ளீச் செய்யப்படுவதாகும். அந்த ரசாயனம் பூண்டில் உள்ள பூச்சிகளை அழிப்பதோடு மட்டுமன்றி, பூண்டிலிருந்து மீண்டும் துளிர்கள் முளைத்தெழுவதையும் தடுக்கும். மேலும் மனித மலத்தை இதற்கு உரமாக பயன்படுத்துவதாகவும் ஒரு செய்தி உள்ளது.
சீனப்பூண்டுகள் மீத்தைல் ப்ரோமைடு என்ற வேதிப்பொருளால் புகையூட்டப்படுகின்றன. இது உயிருக்கு ஊறு விளைவிக்கும் இரசாயனம் ஆகும். அதிக அடர்த்தியுள்ள மீத்தைல் புரோமைடில் புகையூட்டப்படும் பூண்டுகள் நமது சுவாச மண்டலத்தையும், நரம்பு மண்டலத்தையும் பாதித்து மரணம் வரை இட்டுச்செல்லும் என்கிறார் ஹென்றி பெல்.
மேலும் சீனப்பூண்டுகளில் ஈயம், சல்ஃபைட் போன்ற வேதிப்பொருட்களும் கலந்திருப்பதாக சொல்லுகிறார்கள். இவையும் உடலுக்கு ஊறு விளைவிப்பவையாகும்.