
என்னை தாங்கும் அன்பு தந்தை உண்டு
என் சுக துக்கத்தை பங்கீட்டுக் கொள்ளும்
நல்ல அண்ணன் உண்டு
என்னை ஆராதிக்கும் தம்பி உண்டு
என் பால்யத்தோடு பயணிக்கும்
நண்பன் உண்டு
என் தாய்மையை அங்கீகரிக்கும்
மகன் உண்டு
ஒரு ஆண்மகன் ஆரோக்யமான
எல்லா உறவுமாய் என்னிடம் உண்டு
இவர்கள் யாருமே பெண்ணியம் பேசி
பெண்களை கொண்டாடுபவர்கள் அல்ல,,,,
ஆனால் எந்த சூழலிலும்
இவர்கள் என் சுதந்திரத்தையோ
செயல் பாட்டுக்களை தடுத்ததில்லை.,,,
உலக ஆண்கள் தினமாம்,,
பெண்மையை அங்கீகரிக்கும்
அத்தனை அன்பானவர்களுக்கும்
வாழ்த்துக்கள்!

Patrikai.com official YouTube Channel