12227223_1144576452219499_7489858284621942699_n

 

பொதுவாக மழைக்காலம் என்றால், மூகநூல் உட்பட சமூகவலைதளங்களில், மென்மையான உண்ரவுகளை வெளிப்படுத்தும் காதல் கவிதைகளை கொட்டுவார்கள் நெட்டிசன்கள்.

ஆனால் தற்போது பெய்த கனமழையும், அதனால் ஏற்பட்ட வெள்ளமும், சமூக ஆர்வலர்களின் கவிதையைகளை மடைதிறந்திருக்கிறது.

சிந்திக்க வைக்கும் மழை கவிதைகள் சில…

 

கவிரும் பத்திரிகையாளருமான ராகவேந்திர ஆரா எழுதியுள்ள கவிதைகள்:

11866453_1082121835131628_1608105041169634314_n

1.

யற்கையோடு இயைந்து
வாழ்ந்தால்
தண்ணீரை குடிக்கலாம்…
இயற்கையை எதிர்த்து
வாழ்ந்தால்
தண்ணீரே குடிக்கும்!

2.

ர்வே எண்களின்
பின்னால் அலைந்த, அலையும்
சமூகமே…
இந்த
திடீர் ச்முத்திரத்தில்
உன்
சர்வே எண் எது?

சமூக ஆர்வலர் பூமொழி எழுதியுள்ள கவிதை:

பூமொழி

யோ பாவம்…..
காணாமல் போன தனது இருப்பிடத்தைத்தேடி,
ஆறுகளும் ஏரிகளும்
குளங்களும் குட்டைகளும்
பலத்த கண்ணீரோடு
மழையாய் கதறியதன் விளைவோ….?
வெள்ளச்சேதாரம்….!