12241790_10153843825005362_1723455248042732308_n-mi5jnmfpaxvyuhpgctnx341583l4nq86i9vsgbxmj4

மிழகம் முழுவதும் நீர்நிலைகள் ஆக்ரமிப்பு, மணல் கொள்ளை மூலம் ஆறுகளை சூறையாடியது அனைத்துக்கும் முழுப் பொறுப்பு ஏற்கவேண்டிய கட்சிகள் தி.மு.கவும், அ.தி.மு.கவும்தான். இதில் யார் யாரை எவ்வளவு விஞ்சினார்கள் என்று வேண்டுமானால் வாதம் செய்துகொண்டிருக்கலாம். ஆனால் இரு கட்சிகளிலும் இருக்கும் பல (எல்லாரும் அல்ல) பிரமுகர்களின் லாப நோக்கம், அரசியல் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றின் மூலம்தான் ஏரி குளம் ஆக்ரமிப்பு, மணல் கொள்ளை எல்லாம் கடந்த 40 வருடங்களாக நடந்து வந்திருக்கின்றன. இவர்களுக்கு மாற்று என்று சொல்லிக் கொண்டு வந்த பல கட்சிகளிலும் இதே போன்ற நாச சக்திகள்தான் பல பொறுப்புகளில் இருக்கின்றன. இந்த அழிவு சக்திகளை அரசியலிலிருந்து அகற்றுவதுதான் இன்றைய தமிழகத்தின் அசல் பேரிடர் மேலாண்மை.இது நடக்காமல் அடுத்து பத்து வருடமானாலும், கனமழை வெள்ள பாதிப்புகளும் வறட்சிக் கொடுமையும் தமிழகத்தில் குறையவே குறையாது.

ஞாநி சங்கரன் (முகநூல் பதிவு)