சவுதியில் ஒரு மனுநீதிச் சோழன்

சட்டம் அனைவருக்கும் சமம் என்று அனைத்து நாடுகளுமே முழங்கும் நிலையில் பல நாடுகளில் அது நடைமுறையில் இல்லை. வலியவனுக்கு ஒரு நீதியும் எளியவனுக்கு ஒரு நீதியுமே நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் சவுதி அரேபியா மட்டும் அதற்கு விதி விலக்கு. குற்றம் செய்தது இளரவசரேயானாலும் அவரும் மரண தண்டனையில் இருந்து தப்பமுடியாது என்பதை அந்நாடு மெய்ப்பித்துள்ளது.

saudi

சவுதி இளவரசர் துர்க்கி பின் சவுத் அல்-கபீர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சக சவுதி அரேபிய குடிமகனான தனது நண்பரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதால் அவருக்கு இத்தண்டனை கிடைத்துள்ளது.
கடந்த செவ்வாயன்று அவருக்கு ரியாத்தில் வைத்து மரண தண்டனை நிறவிவேற்றப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரச குடும்பத்தினர் இதுபோன்று மரண தண்டனை பெறுவது அரிதாகும். இதற்கு முன்பாக 1975-ஆம் ஆண்டு தமது சொந்த மாமாவை கொன்றதற்காக அரச குடும்பத்தை சேர்ந்த ஃபைசல் பின் முசஹித் அல் சவுத் என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதியின் இளவரசர் இவ்வாண்டு தண்டனை பெறும் 134 வது குற்றவாளியாவார்.
இளவரசருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதன் மூலம் நாட்டின் பாதுகாப்பையும் நீதியையும் உறுதி செய்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்ட 50 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதுதவிர கொலை மற்றும் போதை மருந்து விற்பனை ஆகிய குற்றங்களுக்காகவே அதிகம் அங்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.