மும்பை,
மும்பையில் இன்று காலை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் இரண்டு பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
தெற்கு மும்பையில் உள்ள கஃபே பரேட் பகுதியில் பல மாடிகளை கொண்ட ‘மேக்கர் சேம்பர்’ என்னும் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது.
fire
இந்த கட்டிடத்தின் 20-வது மாடியில் ஒரு வீட்டின் அறையில் இன்று காலை சுமார் 6.30 மணியளவில் திடீரென தீபிடித்தது.
மளமளவென அடுத்தடுத்த அறைகளுக்கும், பக்கத்து வீடுகளுக்கும் தீ வேகமாக பரவியது.
தகவல் அறிந்து பத்து வாகனங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்தனர்.
வெகுநேரம் போராடி தீயை அணைத்ததுடன் 20-வது மாடியில் சிக்கித்தவித்த 11 பேரை பத்திரமாக மீட்டனர்.
மேலும் அங்கிருந்த வீட்டில் கருகிய நிலையில் இருவரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மீட்புப் படையினர், தொடர்ந்து அங்கு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

[youtube-feed feed=1]