கென்னடகி,
அமெரிக்காவின் கென்னகி மாநிலத்தில் பிரபல அமெரிக்க தடகள வீரரான டைசன்.கே வின் மகள் மர்ம நபர்களால் சுட்டுகொல்லப்பட்டடார்.
அமெரிக்க தடகள வீரர் டைசன் கே-வின் 15 வயது மகள் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீரர் டைசன் கே. இவர் ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் சாதனை பல புரிந்துள்ளார்.
இந்நிலையில் தடகள வீரர் கே-வின் 15 வயது மகள் அமெரிக்காவின் கெண்டயில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக லெஸிங்டன் பொலிஸார் கூறுகையில்,
உணவு விடுதி ஒன்றில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கே-வின் மகள் டிரினிடி கழுத்தில் குண்டடிப்பட்டது என்று தெரிவித்தனர்.
பின்னர் குண்டடிபட்ட நிலையில் டிரினிடி கே அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
லெசிங்டன் நகரில் காலையில் வேளையில் இரண்டு வாகனங்களுக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் கழுத்தில் சுடப்பட்ட டிரினிட்டி கே அந்த இடத்திலேயே இறந்து விட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக, இருவரைக் கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களை விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.
100 மீட்டர் ஓட்ட பந்தய வீரர்களில், வரலாற்றிலேயே மிக வேகமாக ஓடுபவர் என்ற பெருமைக்குரிய ஜமைக்காவின் உசேயின் போல்ட்டிற்கு அடுத்த நிலையில் உள்ளவர் தான் டைசன் கே.
ரியோ ஒலிம்பிக்கில் டைசன் கே அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றார். தசை மற்றும் எலும்பு வளர்ச்சியை தூண்டுகின்ற அனபோலிக் ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக ஊக்க மருந்து சோதனையின் முடிவுகள் வந்ததால் இரண்டு ஆண்டுகள் விளையாட்டு போட்டிகளில் இருந்து டைசன் கே தடைசெய்யப்பட்டார். அதனால், 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கம் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது..
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர்,ஓட்டம் 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் டைசன் கே தங்கப்பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதனைடையே தனது மகள் டிரினிடி துப்பாக்கி குண்டடிப்பட்டு உயிரிழந்ததை டைசன் கே தொலைக்காட்சி மூலம் உறுதி செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.