காஷ்மீர்,
பாகிஸ்தானுக்கும், தலிபான் பயங்கரவாத இயக்கத்திற்கும் எந்தஒரு வேறுபாடும் கிடையாது என்று பலூச் தலைவர் நீலா காத்ரி பலூச் சாடிஉள்ளார்.
பாகிஸ்தானின் தென்கிழக்கில் அமைந்து உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை பாகிஸ்தானில் இருத்து பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பலூச் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அவர்கள் ‘சுதந்திர பலுசிஸ்தான் இயக்கம்’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நீலா காத்ரி பலூச்
நீலா காத்ரி பலூச்

இந்நிலையில் பிரதமர் மோடி தனது சுதந்திரதின உரையில், பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானின் மனித உரிமை மீறல் குறித்து கேள்வி எழுப்பினார்.
அப்போது பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கும் என்றார்.
பிரதமர் மோடியின் பலுசிஸ்தான் ஆதரவுப் பேச்சால் ஊக்கம்பெற்ற பலூச் தேசிய இயக்கத்தினர் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
சீனா பாகிஸ்தானுக்கு மறைமுக ஆதரவு அளிப்பதாக சுதந்திர பலுசிஸ்தான் இயக்கம் குற்றம் சாட்டி வருகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா, பலுசிஸ்தானில் பாகிஸ்தானால் மனித உரிமைகள் மீறப்படும் விவகாரத்தை எழுப்பியது.
இதுகுறித்து,  சுதந்திர பலுசிஸ்தான் இயக்கத்தின் தலைவர் நீலா காத்ரி பலூச் கூறியதாவது:
பாகிஸ்தான் துரோகி நாடு, பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்களை அழிப்பதாக கூறி ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிடம் நிதிஉதவி பெறுகிறது.
ஆனால், அதற்கு மாறாக பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறது. இதனை உலக நாடுகள் புரிந்துக் கொள்ளவேண்டிய நேரம் இதுவாகும்.
இனியும் யாராவது நிதிஉதவி அளித்தால் அவர்களும் பயங்கரவாதத்திற்கு பொறுப்பு ஆவார்கள். பாகிஸ்தானுக்கும், தலிபான் பயங்கரவாதத்திற்கும் எந்தஒரு வேறுபாடும் கிடையாது. நாம் இவை இரண்டிற்கும் எதிராக இணைந்து போராட வேண்டும் என்று கூறினார்.