டில்லி,
உலக அளவில் பசி-பட்டினியால் வாடும் மக்கள் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வு முடிவில் இந்தியா 97வது இடத்தில் உள்ளது.
சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்(International Food Policy Research Institute) 2016ம் ஆண்டிற்கான சர்வதேசப் பட்டினிப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியிலில் மொத்தம் 118 நாடுகள் இடம் பெற்றுள்ளன. அதில் இந்தியா 97வது இடம் பிடித்துள்ளது
கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஊட்டச்சத்து விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், இந்தியாவில் இன்னும் தீவிரமாக பட்டினி பிரச்னை உள்ளது.
நாட்டின் 15 சதவீத மக்கள் இன்னும் பட்டினியில் தான் வாடுகின்றனர். ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடான இந்தியா, பசி பட்டினியால் வாடும் நாடுகளின் தரவரிச்சைப்பட்டியலில் 97வது இடம் பெற்றுள்ளது
பொருளாதாரத்தில் இந்தியாவைவிட பின் தங்கியுள்ள நாடுகளான பங்களாதேஷ் ஈரான், ஈராக், நைஜீரியா, உள்ளிட்ட நாடுகளில் குறைந்த அளவே மக்கள் பட்டினி யில் வாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இந்தியாவை விட அதிக மக்கள் பட்டினியில் வாடுவதாக கூறப்பட்டுள்ளது.
மக்கள் தொகை, ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம், ஐந்து வயதிற்குட்பட்ட குந்தைகளின் எடை குறைவு (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயரத்திற்கு ஏற்ற எடை), குழந்தைகளின் வளர்ச்சி குறை ( ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எடைக்கு ஏற்ற உயரம்) உள்ளிட்ட நான்கு முக்கிய காரணிகளை வைத்து இந்த தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு பட்டியலில் ஆசிய நாடுகளிலேயே இந்தியா தான் தர வரிசைப்பட்டியலில் மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இப்பட்டியலில் இந்தியா கடந்த 2000ல் 83வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது 97வது இடம்பிடித்துள்ளது.
இதேபோல பங்களாதேஷ் இப்பட்டியலில், 2000ம் ஆண்டு 84வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவை விட 7 இடங்கள் முன்னேறி 90வது இடத்தில் உள்ளது
சீனா, 29 வது இடத்திலும், வியட்னாம் 64வது இடத்திலும், கம்போடியா 71வது இடத்திலும், நேபாளம் 72வது இடத்திலும், இந்தோனேஷியா, 72வது இடத்திலும், மியான்மர் 75வது இடத்திலும் உள்ளன.
இதேபோல் இலங்கை 84வது இடத்திலும், பங்களாதேஷ் 90வது இடத்திலும், இந்தியா 97வது இடத்திலும், வட கொரியா 98வது இடத்திலும், பாகிஸ்தான் 107வது இடத்திலும், தைமூர் 110வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 111வது இடத்திலும் உள்ளன.