நெட்டிசன்:
Brijesh Kalappa அவர்களின் முகநூல் பதிவு:

இந்த கார்டூன் 1945-ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை உருவாக்கியவர் யார் தெரியுமா? காந்தியை சுட்டுக்கொன்ற கொலைகாரனான நாதுராம் கோட்சேதான். காந்தியை பத்து தலை ராவணன் போல காட்டியிருக்கிறது இந்த கார்ட்டூன். இந்த பத்து தலையும் வெவ்வேறு சுதந்திர போராட்ட தலைவர்களுடையது. அதில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் தலைகள் உள்ளதையும் கவனியுங்கள். அவர்கள் அப்போது இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்களாய் இருந்தவர்கள். அவர்களையும் காந்தியோடு சேர்த்து கொல்வது போல அம்பு விடுவதாக சித்தரித்த அதே பாஜக/ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் இயக்கங்கள் இன்று இவர்களை பெரும் தியாகிகளாக கொண்டாடுவது முரண் அல்லவா?
Patrikai.com official YouTube Channel