டில்லி,
ரெயில் பயணிகளுக்கு சூடான உணவு வழங்கும் இ-கேட்டரிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்து உள்ளது.

ரெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு உணவு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது வருகிறது. பாக்கிங் செய்யப்பட்ட பொட்டலங்களில் உள்ள உணவுகள் மிகவும் ஆறிபோயும், சில சமயங்களில் கெட்டுபோயும் உள்ளது. இது பிரயாணிகளுக்கு பெரும் பிரச்சினையாகவே உள்ளது.
இதன்காரணமாக ஆறிப்போன நிலையில் உள்ள ரெயில்வே கேண்டீன் உணவுகளை பயணிகள் அதிகம் விரும்புவதில்லை.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட இந்திய ரெயில்வே இ-கேட்டரிங் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தின்படி நீண்ட தூரம் பிரயாணம் செய்யும் பயணிகள் தங்களுக்கு விருப்பமான பாஸ்ட்புட் வகை உணவுகளை மொபைல் ஆப்ஸ் மூலம் ஆர்டர் செய்து விரைவாக பெற்றுக்கொள்ளலாம்.

தங்கள் இருக்கை எண்ணைக் குறிப்பிட்டு பயணிகள் தங்களுக்குப் பிடித்தமான உணவை ஆர்டர் செய்தால், ரெயில் நிலையங்களில் ரெயில் நிற்கும்போது 2 நிமிடங்களில் அவர்கள் இருக்கும் இடத்திற்கே உணவு வந்துவிடும் என்பது சிறப்பு.
மேலும், மக்கள் அதிகம் வந்து செல்லும் வழித்தடங்களில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களுக்கு உணவு கொண்டுவர தனியார் உணவகங்களுடன் ரெயில்வே ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி சூடான உணவுகளை ஆர்டர் செய்து உண்டு மகிழ்ந்தனர்.
இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக தனியார் உணவு விடுதிகள் ரெயில் நிலையங்களில் உணவுகளை சமைத்து சூடாக பயணிகளுக்கு விநியோகம் செய்ய ஸ்பேஸ் கிச்சன் என்ற திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.
Patrikai.com official YouTube Channel