
“ரெமோ” சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது. 24AM ஸ்டூடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பே ரெமோ தான். ஆனால் இவர்கள் செய்த விளம்பரத்தை பார்த்தால் அப்படி தெரிய வாய்ப்பே இல்லை.
இத்திரைப்படத்தின் கதையை பொறுத்தவரை சினிமாவில் நடித்து பெரிய நடிகனாக ஆக வேண்டும் என்று சிறு வயதிலுருந்தே ஆசை, இதற்காக கல்வியை கூட பாதியில் விட்ட ஒருவன் அதன் பின் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது, கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் ஒரு படத்தில் ஹீரோவுக்கு நர்ஸ் வேடம் என்று கூறியதும் பெண் வேடம் போடுகிறார். அப்போது கீர்த்தி சுரேஷை பார்கின்றார், அப்போது அவருக்கு நிச்சயம் ஆகிவிட்டது என்பது தெரியவருகின்றது. அதன் பின் கீர்த்தி சுரேஷ் அவருக்கு கிடைத்தாரா? இல்லையா? சினிமா துறையில் ஜெயித்தாரா? என்பது தான் இந்த திரைப்படத்தின் சுருக்கமான கதை.
சிவகார்த்திகேயன் :-

படத்தில் சிவாவுக்கு 2 வேடங்கள் இரண்டையும் கலக்கியுள்ளார், பெண் வேடத்தில் ஒவ்வொரு முறையும் அவர் தோன்றும் போதும் நம்மை மறந்து அவரை ரசிக்க ஆரம்பித்துவிடுவோம். அந்த அளவுக்கு அவர் ஒரு ஆண் என்பதை மறக்கடிக்கும் அளவுக்கு அவருக்கு மேக்கப் போட்டுள்ளனர். படத்தின் மிகப்பெரிய செலவு என்னவென்றால் அது இவருக்கு போடப்படுள்ள மேக்கப் என்று தான் சொல்ல வேண்டும், பெண் குரலில் அவர் பேசியது அனைவருக்கும் ஆச்சரியம். இந்த திரைப்படத்திற்கு பிறகு சிவாவுக்கு பெண் ரசிகர்கள் அதிகமாகிவிடுவார்கள் என்பது நிச்சயம்.
கீர்த்தி சுரேஷ் :-

இந்த புள்ள என்ன பண்ணாலும் அழகுடா சாமி என்று சொல்லும் அளவுக்கு இவர் நடித்துள்ளார். ஒரு காட்சியில் அவர் அப்பாவிடம் சிவாவை மறக்க முடியவில்லை என்று அவர் கூறும் போது “ப்ப்ப்ப்பா” என்னா நடிப்பு அப்படின்னு சொல்லும் அளவுக்கு அவர் நடிப்பு இருந்தது.
சதீஷ் :-

மொட்ட ராஜேந்திரனும், சதீஷும் செய்யும் லூட்டிகளும் ராஜேந்திரனை சதீஷ் கலாய்க்கும் காட்சிகளும் முதல் பாதியில் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் என்பது உறுதி. இவரின் டைமிங் காமெடி வர வர அருமையாகவும் ரசிக்கும் அளவுக்கும் இருக்கின்றது மேலும் வளர வாழ்த்துக்கள்.
யோகி பாபு :-

படத்தின் இரண்டாம் பாதி நர்ஸ் சிவகார்த்திகேயனை இவர் துரத்தி துரத்தி காதலிக்கும்போதும் சரி, கீர்த்தி சுரேஷிடம் நர்ஸ் சிவாவின் போட்டோ காட்டி என்னோட ஏஞ்சல் மிஸ்சிங் என்று கூறும்போது கீர்த்தி யோகி பாபுவிடம் இது பொண்ணு இல்லடா என்று கூறும்போது சரி யோகியின் அசால்ட் நடிப்பு நம்மை கவர்ந்துவிடுகிறார். நிச்சயம் சொல்கின்றோம் இவர் கண்டிப்பாக ஒரு நாள் தமிழ் சினிமாவில் கால்ஷீட்டுக்காக பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் காத்திருப்பார்கள். வாழ்க வளமுடன் யோகி.
படத்தில் நடித்த அனைவரையும் சரியான முறையில் பயன்படித்தியிருக்கிறார் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன்.

பாக்கியராஜ் கண்ணன் என்ன தான் ஹாலிவுட் படத்தை காப்பி அடித்து இருந்தாலும் இவர் இயக்கத்தை பார்த்தால் உங்களால் நிச்சயம் பழைய பாக்கியராஜ் தான் நியாபகம் வரும். அந்த அளவுக்கு இவரின் உழைப்பு தெரிகின்றது.
படத்தின் மைனஸ் – சில இடங்களில் நமக்கே அடுத்து என்ன நடக்கும் என்று தெரிகின்றது.
மொத்ததில் இந்த ரெமோ விடுமுறை நாட்களில் கொண்டாட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
Patrikai.com official YouTube Channel