நெட்டிசன்:
கடந்த 2012ம் ஆண்டு கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அப்போது கர்நாடகாவை ஆண்டுவந்த பா.ஜ.க. முதல்வர், “காவிரி ந்திநீர் தீர்ப்பாணைய பரிந்துரைகளை அரசிதழில் வெளியிடக்கூடாது. அப்படி வெளியிட்டால் தமிழகத்துக்கு தண்ணீர் தந்தே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்” என்று போராடினார்.

ஆனால் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் நடந்துகொண்டிருந்த ஐக்கிய முற்போக்கு அரசு, தீர்ப்பாணையை அரசிதழில் வெளியிட்டது.
இந்த நிலையில்தான் 2012 கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வந்தது. அதில் காங்கிரஸ்தான் பெரு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாஜக வெறும் 20 தொகுதிகளில்தான் வென்றது.
காவிரி நீர், தமிழ்நாட்டிற்குக் கொடுக்கப்படக கூடாது என்பதை வைத்துதான் கர்நாடக வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்பது தவறு என்பதை உணர்த்தும் விசயம் இது. அரசியல்வாதிகள்தான், மொழிவெறி இனவெறியை தூண்டுகிறார்கள். மக்கள் அப்படி அல்ல!
(வாட்ஸ்அப்)
Patrikai.com official YouTube Channel