
‘இறைவி’ படத்திற்கு பிறகு இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ரெடியாகிவரும் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இப்படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். இதனை இயக்குநர் கெளதம் மேனனின் ‘ஒன்றாக எண்டர்டெயின்மென்ட்’வுடன் இணைந்து ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ பி.மதன் தயாரிக்கிறார்.
இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ரெஜினா, நந்திதா என டபுள் ஹீரோயின்ஸாம். ஹாரர் சைகோ திரில்லரான இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்தது.
இந்நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலரை இந்த மாதம் (அக்டோபர்) இறுதியிலும், படத்தை நவம்பர் 11 அல்லது 18-ஆம் தேதியும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது படக்குழு. ஏற்கெனவே, படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வெளியீட்டு உரிமையை ‘சவுத்சைட் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel