இன்னும் 48 மணிநேரத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியிலுள்ள டபீக் நகரை அடைந்துவிடுவோம் என்று சிரிய கிளர்ச்சியாளர்களின் படை அறிவித்துள்ளது.
துருக்கியின் ஆதரவு பெற்ற சிரிய கிளர்ச்சிப்படை சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகிறது. இவர்கள் டபீக் நகரை நோக்கி முன்னேறி வருகிறார்கள்.
வழியில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் நிறைய கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதால் இவர்கள் பயணம் தாமதமாகி வருகிறது. கண்ணிவெடியில் சிக்கி இதுவரை 15 கிளர்ச்சிப் படை வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.

அனைத்தும் திட்டப்படி நடந்தால் இன்னும் 48 மணிநேரத்தில் டபீக் நகரை அடைந்து விடுவோம் என கிளர்ச்சி படைகளின் தலைவர் அகமது ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel