குறைந்த இணைய வேகம் காரணமாக ஃபேஸ்புக் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுவோருக்காகவே ஃபேஸ்புக் நிறுவனம் மெசஞ்சர் லைட் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்துகிறது.

ஆண்ட்ராய்டு பயன்படுத்துவார் இதை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.
டெக்ஸ்ட், படங்கள் ஆகியவைகளை பகிர்ந்து கொள்ள முடியும். வீடியோ, வீடியோ சாட் மற்றும் பணம் செலுத்துதல் ஆகியன செய்ய முடியாது.
இவ்வசதி முதல்கட்டமாக கென்யா, துனிசியா, மலேசியா, இலங்கை மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தபட இருக்கிறது. விரைவில் மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.
உலகில் அனைவரும் இணையத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்ற ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்கின் கனவை நிறைவேற்ற இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
Patrikai.com official YouTube Channel