ராஜஸ்தான் மாநிலத்தின் தபுகாரா ஹோண்டா நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லைக் போட்ட பணியாளர் ஒருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தபுகாரா ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் 100 நிரந்தர பணியாளர்களையும் 2500 ஒப்பந்த பணியாளர்களையும் வேலைநீக்கம் செய்தது.
pic-eight-copy
இதன் விளைவாக அங்கு மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்துவருகின்றன.
இந்த வேலைநிறுத்த போராட்டங்கள் சில சம்பந்தமான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் இடம்பெற்றிருந்தன. அவைகளுக்கு லைக் அளித்த ஹோண்டா நிறுவனத்தின் நிரந்தர பணியாளர் விஜேந்தர் குமார் என்பவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சமூக வலைதளங்களில் ஸ்டிரைக்குக்கு ஆதரவளிக்கும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.