பீஹார் தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ வந்துவிட்டன. பாஜக தோல்வி அடைந்து, நிதீ தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில், சமூகவலைதளங்களில் வெளியான சிலரது சூடான விமர்சனங்கள்.. சுடச் சுட..!
Kumaresan Asak
பட்டாசு வெடித்துக கொண்டாடுகிறார்கள் – இந்தியாவில்.
Rahim Journalist
பீ(ப்)ஹார்…. வெற்றி.
தொல்காப்பியன் பொற்கோ
”பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா தோல்வி அடைந்ததற்கு பிரதமர் மோடியை சாடமுடியாது ”
-பாரதீய ஜனதா கட்சி.
# வென்றால் மோடியால.
தோற்றால் மக்களாலா???
மாட்டிறைச்சியா அல்லவா என்பதல்ல, தங்களது உணவை தங்களைத் தவிர எந்தக் கொம்பனும் தீர்மானிக்க இயயலாது என்பதையும் பீஹார் மக்கள் தெளிவு படுத்தி இருக்கிறார்களே தவிர அது ஒன்றை மட்டுமே என்று யாரேனும் சுறுக்கிப் புரிந்து கொண்டால் அவரை ஏதேனும் ஒரு சரியான புள்ளியில் காணாமல் தொலைத்து விடுவார்கள்.
#என் உணவு என் உரிமை
Aazhi Senthil Nathan
அநேகமாக சகிப்புத்தன்மையின் முக்கியத்துவத்தை இன்று பாஜகவினர் உணர்ந்திருப்பார்கள்!
Tp Jayaraman
மாட்டுப் பற்றை விட நாட்டுப் பற்றே முக்கியம் என தீர்ப்பளித்த பீகார் மக்கள் !