james

ப்போ, நாடு முழுதும் கொண்டாடக்கூடியவரா இருக்கார் ஷாருக்கான். காரணம், “ இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. தேவைப்பட்டால் பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திருப்பிக் கொடுப்பேன்” என்று சில நாட்களுக்கு அவர் சொன்னதுதான்.

அதோட, “இப்படி பேசற ஷாருக்கான் தேச விரோதி, அவரது இதயம் பாகிஸ்தானில் உள்ளது. அவரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்தணும்” என்று விசுவ இந்து பரிஷத் மூத்த தலைவர்களில் ஒருவர் கூறினார். மேலும் பா.ஜ.க. எம்.பி. யோகி ஆதித்யா நாத் என்பவரும் ஷாருக்கானுக்கு எதிராக பரபரப்பு கருத்துக்களை வெளியிட்டார்.

இதனால நாடு முழுசும் இருக்கிற என்னை மாதிரி நடுநிலைவாதிங்க ஷாருக்கானை ஆதரிக்கிறாங்க.

வி.ஹெச்.பி. மிரட்டல் விடுத்திருக்கிறதால மும்பையில் உள்ள ஷாருக்கான் வீட்டிற்கு முன் 75 போலீசார் குவிக்கப்பட்டு, 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுவர்றாங்க..

இப்படி நியாயத்துக்காக பேசறது ஷாருக்கானுக்கு புதுசு இல்லே.   2010-ம் வருசம்… “ ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை விளையாட அனுமதிக்க வேண்டும்” அப்டினு இவரு சொல்ல.. உடனே வழக்கம்போல சிவசேன கட்சிக்காரங்க எதிர்ப்பு தெரிவிச்சாங்க. அதோட, ஷாருக்கான் வீட்டு முன்னால போராட்டத்தில் ஈடுபட்டாங்க. இதனால து 50 காவலர்கள் அடங்கிய குழு அவரது வீட்டிற்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்தது.

ஷாருக்கானோட இரண்டு கருத்துக்களும் சரியானதுதான். ஆனா ஷாருக்கான் சரியானவர்தானா?

2012ம் வருசம் மும்பை வான்கடே மைதானத்துல அவரு எப்படி நடந்துகிட்டாருன்னு நினைவு இருக்கா?

201508021413594394_Shah-Rukh-Khan-s-Wankhede-Ban-Lifted-by-Mumbai-Cricket_SECVPF.gif

இல்லாதவங்களுக்காக ஒரு ப்ளாஷ்பேக்.

அந்த வருசம் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரோட கொல்கத்தா-மும்பை அணி மோதிய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்துச்சு. இவருதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணியோட ஓனர். காலரியில உக்காந்து அந்த மேட்சை “உற்சாகமா” பாத்துக்கிட்டே இருந்தார். போட்டியில் இவரேட அணி ஜெயிச்சிருச்சு. உடனே மைதானத்துக்குள்ள ஓட முயற்சித்தார். இவரு கூட சில குழந்தைகளும் ஓடி வந்தாங்க. அப்போ மைதான பாதுகாவலர், “விதிமுறைப்படி வேறு நபர்களை மைதானத்துக்கு உள்ளாற அனுப்ப முடியாது”னு தடுத்தாரு.

அவ்வளவுதான்… உலகத்துல இருக்கிற அத்தனை கெட்ட வார்த்தைகளையும் பேசி, போட்டுத்தாக்கிட்டாரு ஷாருக்கான். அதோட, “என்னையே தடுக்கிறியா.. உன்னை என்ன செய்யறேன் பாரு”ன்னு ஏக கலாட்டா. சுத்தி இருந்தவங்க எல்லாம் பயந்து நடுங்கிட்டாங்க. குறிப்பா, பக்கத்துல இருந்த குழந்தைங்க. அவங்க மிரண்டு போய் நின்னுகிட்டிருந்தாங்க.

“குழந்தைகள் முன்னிலையிலேயே ஆபாசமா பேசுறது அவங்க மனநிலையை பாதிக்கும்”னு சமூக ஆர்வலர் அமீத்மரு, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனிடம் புகார் செஞ்சிட்டாரு.

இந்த புகாரை விசாரிச்ச மகாராஷ்டிரா குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் செயலாளர் திரிபாதி, “இது குறித்து ஏன் போலீசார் வழக்கு பதியல.. உடனே வழக்கு பதிங்க”னு உத்தரவு போட்டாரு.

அதோட மும்பை கிரிக்கெட் சங்கம் ஷாருக்கனை அஞ்சு வருடங்களுக்கு கிரிக்கெட் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடை போட்டுச்சு. மேலும், , வான்கடே மைதானத்திற்குள் நுழைவதற்கும் தடை போட்டுச்சு. (சமீபத்திலதான் அந்த தடையை நீக்கினாங்க.)

“சம்பவத்து அன்னைக்கு, ஷாருக்கான் ஓவர் போதையில இருந்தாரு. ரொம்ப மோசமா பிஹேவ் பண்ணாரு”ன்னு பாத்தவங்க எல்லாம் சொன்னாங்க.

விதிமுறைய மீறி தன்னை மைதானத்துக்குள்ள அனுப்பனும்னு மோசமா ரகளை செஞ்ச இவர்தான் இப்போ சகிப்புத்தன்மை பத்தி பேசறார்.

இன்னொரு மேட்டரும் இருக்கு. மும்பையில இவர் தனக்காக கட்டின மன்னாட் மாளிகையில ஏகப்பட்ட விதிமீறல்கள். தொல்பொருள் சட்டங்கள் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டது.

அதுமட்டுமில்ல.. அடுத்தவங்க சிக்கல்ல இருக்கிறப்போ அதை கிண்டலடிக்கிறதுதான் இவரோட பாலிசியே. அதுக்கு ஒரு உதாரணம் சொல்றேன்.

இவரோட போட்டி நடிகரான அமீர்கான் பிகே.,அப்படிங்கிற படம் எடுத்தாருல்ல… ஆகா ஓகோனு ஓடின, நல்ல படம். அந்த படத்துல ஒரு காட்சியில அமீர்கான் நிர்வாணமா வருவார். அதாவது இடுப்புக்கு கீழே டேப்ரிக்கார்டரால் மறைச்சிருப்பார்.   இதுக்கு பயங்க எதிர்ப்பு கிளம்புச்சு. அமீர்கான் டென்சனா இருந்தாரு.

அந்த சமயத்துல ஒரு விழாவுல கலந்துகிட்டாரு ஷாருக்கான். அப்போ, “அமீர்கான் தனது இடுப்புக்கு கீழ் ஏதும் வைக்கவில்லை என்றால் தான் ஆபாசம்…இடுப்புக்கு கீழ் ஏன் டேப்ரிக்கார்டரை வைத்தாய் என்றுதான் ஆளாளுக்கு ஆத்திரப்படறாங்க போலிருக்கு”னு சொல்லி, சர்ச்சையை இன்னும் பெருசாக்கினாரு.

ஹூம்.. இப்படிப்பட்டவருதான் இன்னைக்கு “போராளியா” முகம் காட்டறாரு. சரி விடுங்க.. “நாட்டுல சகிப்புத்தன்மை குறைஞ்சு வருது”ன்னு அவரு சொன்னது உண்மைதானே… அதனால அவரோட பழைய தப்புங்களை மன்னிப்போம்!