நெட்டிசன்:
எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் முகநூல் பதிவு:
“என் திரையுலக குருவான திரு கே.பாக்யராஜ் சமீபத்தில் ஒரு விழாவில் இப்படிப் பேசினார்:

“எனக்கு ஆன்மிகவாதி ஒருத்தரை அறிமுகப் படுத்தினாங்க. எங்கிட்ட நல்லா பேசிக்கிட்டிருந்தார். நான் ஒரு சந்தேகம்னு கேட்டேன். சொல்லுங்கன்னார். ஒரு மனுஷன் படற துயரத்துக்கு போன ஜென்மத்துல செஞ்ச பாவங்கள்தான் காரணம்னு சொல்றாங்களே.. அப்படின்னா.. முதலாம் ஜென்மத்துல ஒரு மனுஷன் படற துன்பத்துக்கு என்ன காரணம் அப்படின்னு கேட்டேன். அதுக்கப்பறம் அவர் என் பக்கம் திரும்பவே இல்லை.”
(அந்த ஆன்மிகவாதி யாரா இருக்கும்?)
Patrikai.com official YouTube Channel