நெட்டிசன்:
சுரேஷ்பாபு (Suresh Babu Thayagam ) அவர்களின் முகநூல் பதிவு:
ஜிங்கா_கோல்ட் – நாங்கள் வள்ளுவன், வாசுகி போல் இணைந்து வாழ்கிறோம். நீங்களும் அப்படி வாழவேண்டுமா இன்றே ஜிங்கா கோல்ட் வாங்கி சாப்பிடுங்கள்.
அட கருமம் பிடிச்சவனுங்களா.., உலக திருமறை எழுதிய வள்ளுவனை காமதேவனாக்கிட்டீங்களேடா…!
cxilzxmweae3gwoஆணுறை – டாட்டட் காண்டம், முன்னெப்போதும் விட அதிக சுகம் தருவது. அணிந்தது போன்ற உணர்வே தராத மிக மிக மெல்லிய காண்டம். பல்வேறு நறுமணங்களில் கிடைக்கிறது. வாங்கி சுகம் பெறுங்கள்…!
விளம்பரம் போடுறவன், உன் வீட்டிலே உன் மகனையும் மகளையும் பக்கத்திலேயே உட்கார வைச்சு வியர்வை வடிய ஆணும் பெண்ணும் கட்டிப்புரண்டபடி காட்டப்படும் இந்த நீலப்பட விளம்பரத்தை பார்ப்பானுங்களா?
மாதவிடாய் நேப்கின்கள் – “அது போன்ற சமயங்களில்” கஷ்டப்படுகிறோம், நேராக படுக்கிறோம். உடைகள் நனைத்து விடுகின்றன. ஆனால் இனி தொல்லையில்லை, அதிக ஈரத்தை உறிஞ்சும் புதிய வகை நேப்கின்கள் இவை…!!!
நேப்கின் விளம்பரங்களை போல் பெண்களை கொச்சப்படுத்தும் வேறெதும் இங்கில்லை. பெண் குழந்தைகளின் உடலமைப்பை எல்லா ஆங்கிள்களிலும் வளைத்து வளைத்து காண்பித்து, கடைசியில் அந்த நேப்கினை தகுந்தவாறு உடலில் பொருத்தி காண்பிப்பது உச்சக்கட்ட விளம்பர பொறுக்கித்தனம்.
பாடி_ஸ்பிரே – எதிர்வீட்டிலே திருமணமாகி முதல்இரவுக்கு தயாராக இருக்கிறாள் பெண். ஜன்னல் வழியாக வருகிறது நறுமணம். ஜன்னல் திறந்து பார்க்கிறாள். எதிர்வீட்டிலே ஒருவன் பாடி ஸ்பிரேவை ஒரு அழுத்து அழுத்துகிறான். அந்த நறுமணத்தில் மயங்கி இவள் முந்தானையை இறக்குகிறாள். அவன் இன்னொரு முறை பாடி ஸ்பிரேவை அழுத்துகிறான். இவள் அடுத்த உடையை கழட்டுகிறாள். இப்படி போகிறது இந்த விளம்பரம்!!!
வெறும் நறுமணத்திற்க்காக தன்னை அடுத்தவனுக்கு நிர்வாணப்படுத்தி காட்டுவது தான் இந்த விளம்பரம் சொல்லவரும் கலாச்சார தத்துவம்!!!
அசிங்கமான விளம்பரங்களின் பட்டியல் இதுபோல் நிறைய உண்டு!!! இங்கே, ஒரு பெண்ணை 13 நொடிகளுக்கு மேலே உற்று பார்த்தால், பார்க்கிற நபர் மீது அந்த பெண் வழக்கு போடலாம் என சட்டம் சொல்லுகிறதாம். ஆனால், ஒரு பெண்ணை இத்தனை அவமானப்படுத்தும் விளம்பரங்களின் மீது எந்த சமூக அமைப்பும் எகிறியதாக தெரியவில்லை!!!
அம்மா, காண்டம்னா என்ன விபரமறியா சிறு மகன் தாயிடம் கேட்கும் நிலையை,
அப்பா, நேப்கின் எதற்கு என விபரமறியா சிறு மகள் தகப்பனிடம் கேட்கும் நிலையை, பதிலின்றி உடல்நெளிந்து கடந்து செல்லும் நடுத்தர வர்க்கத்தவர்களாகிய நமக்கு கூச்சமோ உச்சத்தில் ஏறுகிறது.
விளம்பர வக்கிரங்கள் கூட வன்முறைக்கான வழித்தடங்கள் தான்!