முதல்வர் ஜெயலலிதாவை பாதித்த காய்ச்சலுக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியிருக்கிறார் ஒரு ரத்தத்தின் ரத்தம்!
நெல்லையில் வசிக்கும் ‘அம்மா பக்தரான’ ஏ. சுரேஷ். “கல் நெஞ்ச காய்ச்சலே… எங்கள் தெய்வம் அம்மாவை சீண்டாதே! சீண்டாதே!! – இப்படிக்கு அம்மாவின் பக்தன் நெல்லை ஏ. சுரேஷ்” என்று போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்.
உலகிலேயே ஜூரத்தை கண்டித்து, மிர்ரட்டி போஸ்டர் அடித்தவர் இவராகத்தான் இருக்கும்.
ஆகவே உடனடியாக அந்த மனிதரை தொடர்பு கொண்டு பேசினோம்.
“நீங்கதான், வித்தியாசமான போஸ்டர் ஒட்டியிருக்கீங்களா…”
“அம்மா ஜூரத்தை பத்தித்தானே.. ஆமாமாம்…”
“ஜூரத்த கண்டிச்சு போஸ்டர் அடிச்சிருக்கீங்களே… இது ஜூரத்துக்கு தெரியுமா..”
“என்ன சொல்றீங்க..”
“ஜூரம், இதை படிக்குமா… “
“ம்…”
“ஓகோ.. அப்போ ஜூரத்துகூட பேசியிருக்கீங்களா..”
“பேசியிருக்கேன்..”
“அட… என்ன பேசியிருக்கீங்க…”
“ம்..” என்று யோசித்தவர், “ அதெல்லாம் வேண்டாங்க..” என்று
போனை கட் செய்துவிட்டார்.