கொச்சி:
சிறந்த பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்து உள்ளார்.
16-ocean-12
கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற,  “கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்காக, அமிர்தா பல்கலைக் கழகம் கண்டுபிடித்த புதிய தொடர்பு சாதனமான ’ஓசன் நெட்’ அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனித வள மேம்பாட்டுத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பேசியதாவது:
இது போன்ற முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பது என்னுடைய கடமை மற்றும் பொறுப்பு ஆகும். மீனவர்கள் கடலில் சந்திக்கும் சில பிரச்சனைகளுக்கு இந்த தொலைத் தொடர்பு முறை நிரந்தர தீர்வாக இருக்கும். புதுமைகளை ஊக்குவிக்கும் பல்கலைக் கழகங்களுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கும். புதுமை கண்டு பிடிப்புகளுக்கான மையங்களை நாடு முழுவதும் ஏற்படுத்துவதே பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கமாகும்.
நன்றாக செயல்படும் பல்கலைக் கழகங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கி, கட்டுப்பாடுகளைக் குறைத்து ஆதரவு அளிப்போம். சரியாக செயல்படாத பல்கலைக் கழகங்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். புதுமையான கண்டுபிடிப்புகள் மூலமாக தான் நாடு வளர்ச்சி அடைய முடியும். இதற்காக தொழிற்சாலைகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் உடன் இணைந்து செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.