pslv-c35
ஸ்ரீ ஹரிகோட்டா:
ந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து 8 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி – சி35 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்திய ராக்கெட் வரலாற்றிலும், இஸ்ரோ வரலாற்றிலும்  முதன்முறையாக ஒரே பயணத்தில் இருவேறு சுற்றுவட்டப்பாதைகளில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் முயற்சி இது.  முதல் முறையாக ஒரே நேரத்தில் இரண்டு சுற்றுவட்டப்பாதைகளில் இன்று அனுப்பப்படும் செயற்கைகோள்கள்  நிலை நிறுத்தப்பட உள்ளன.
இந்திய ராக்கெட் பயணத்திலேயே மிக நீண்டதாக கருதப்படும் இந்த நிகழ்வு இஸ்ரோ வரலாற்றில் மற்றொரு மைல்கல்லாக கருதப்படுகிறது.
பிஎஸ்எல்வி – சி35 ராக்கெட்டில், இந்திய பருவ நிலை ஆய்வுக்கான ‘ஸ்கேட்சாட் -1’ என்ற 370 கிலோ கொண்ட பிரதான செயற்கைக்கோள் இடம்பெற்று இருக்கிறது. ஏற்கனவே வானிலை ஆய்வுக்கு பல செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு இருந்தாலும், வானிலை அறிவிப்புகளை முன்கூட்டியே, துல்லியமாக கணிக்க இது ஏதுவாக இருக்கும் என்கின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.
புயல் வருவதை முன்கூட்டியே துல்லியமாக கணக்கிட உதவும் ஸ்காட்சாட் 1 செயற்கைகோள் உள்பட 8 செயற்கைகோள்களுடன் இன்று காலை 9.12 மணிக்கு விண்ணில்  பாய்ந்தது பிஎஸ்எல்வி சி35.
இன்று விண்ணில் நிலை நிறுத்தப்பட உள்ள 8 செயற்கைகோள்களில் மூன்று இந்தியாவைச் சேர்ந்தவை.
5 செயற்கைகோள்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவை.
 
அல்ஜீரியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தயாரித்துள்ள 5 செயற்கை கோள்கள், மும்பை ஐஐடி உருவாக்கியுள்ள பிரதம், பெங்களூரு பிஇஎஸ் பல்கலைகழகம் உருவாக்கியுள்ள ‘பிசாட்’ செயற்கை கோள்கள் போன்றவையும் இந்த ராக்கெட்டில் இடம் பெற்றுள்ளன.