பிரிட்டனின் முக்கிய நகரங்களில் மண்ணின் மைந்தர்களாகிய ஆங்கியேலர்களின் மக்கள் தொகையைவிட குடியேறிகளின் விகிதம் அதிகமாகிவிட்டதாக மான்செஸ்டர் பல்கலைகழகத்தின் கணக்கெடுப்பு கூறுகிறது.
லெய்செஸ்டர், லூட்டன் மற்றும் ஸ்லவ் ஆகிய இடங்களில் 50%க்கும் குறைவான விகிதத்திலேயே ஆங்கிலேயர்களின் விகிதம் இருப்பதாகவும், அதிலும் முக்கியமாக ஸ்லவ் பகுதியில் வெறும் 35% மட்டுமே ஆங்கியேலர் வசிப்பதாகவும் கணக்கெடுப்பு கூறுகிறது.
பெர்க்ஷைர் மாகாணம் ழுவதும் இந்தியர்களாலும் பாகிஸ்தானியர்களாலும் நிறைந்துள்ளது. லண்டனில் 44.9 % மட்டுமே ஆங்கிலேயர்கள் வசிக்கிறார்கள். பர்மிங்ஹாம் நகரத்தில் இன்னும் ஏழாண்டுகளில் ஆங்கிலேயர்கள் மைனாரிட்டி ஆகிவிடுவார்கள் என்று அஞ்சப்படுகிறது.
நாடு முழுவதையும் வெவ்வேறு கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து வருவதால் பிரிட்டன் தனது தனித்துவத்தை இழந்து வருவதாக பழமைவாதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.