இஸ்லாமாபாத்:
காஷ்மீரில் நடைபெற்று வரும் வன்முறைக்கு பதிலடிதான் உரி தாக்குதல் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் ஆணவமாக பேசி உள்ளார்.
காஷ்மீர் மக்கள் மீது கடந்த 2 மாதங்களாக இந்தியா ராணுவம் நடத்திவரும் அடக்குமுறைகள், தாக்குதலுக்கு பதிலடிதான் உரி ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்  ஆணவ மாக பேசியுள்ளார்.
navaz
காஷ்மீரில் உள்ள இந்திய உரி ராணுவமுகாம்மீது பாகிஸ்தானை சேர்ந்த  ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகள்  தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இதனால் ஏற்பட்ட துப்பாக்கி சூடில் 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை ஆய்வு செய்ததில் அது பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டது என தெரியவந்தது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய நவாஸ் ஷெரீப் , தீவிரவாதி பர்ஹான் வானியை தியாகி போன்றும், இளம் தலைவர் போன்றும் சித்தரித்து பெருமைப்படுத்தி பேசினார்.
இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என ஐ.நா.வில் வலியுறுத்தப்பட்டது.
ஐ.நா. கூட்டத்தைக் முடித்துக்கொண்டு பாகிஸ்தான் திரும்பும் முன், லண்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது “ காஷ்மீரில் கடந்த 2 மாதங்களாக அப்பாவி மக்கள் மீது ராணுவம் நடத்திவரும் அடக்குமுறைகள் தாக்குதலுக்கு பதிலடிதான் உரி தாக்குதல் என்றும்,
காஷ்மீர் கலவரத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், ஏராளமான மக்கள் பார்வை இழந்தனர். அந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களில் உறவினர்கள், நெருங்கியவர்கள்தான்  உரி தாக்குதலை நடத்தி இருப்பார்கள் என்றார்.
மேலும் உரி தாக்குதல் நடந்த சில மணிநேரத்தில், பாகிஸ்தான் தான் காரணம் என எந்தவித விசாரணையும், ஆதரமும் இன்றி இந்தியா எங்களை குற்றம்சாட்டி, பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது.
காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் அடக்குமுறைகளையும், அட்டூழியங்களையும் உலகம் நாடுகள் அனைத்தும் உணர்ந்துள்ளன.  இதுவரை அங்கு 108 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 150 பேர் ராணுவத்தின் பெல்லட் குண்டுகளால் பார்வை இழந்துள்ளனர். காஷ்மீரில் நடந்த கொலைகள் குறித்து இந்தியா விசாரணை நடத்த வேண்டும் என்றும்,
ஜம்மு-காஷ்மீர்  பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாதவரை, இந்தப் பிராந்தியத்தில் அமைதிக்கு வாய்ப்பே இல்லை ” என்றும் கூறி உள்ளார்.
நவாஸ் ஷெரிப்பின் இந்த ஆணவ பேச்சு இந்திய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை  ஏற்படுத்தி உள்ளது.