யாழ்ப்பாணம்:
ன்று இலங்கை யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள்.
1
இலங்கை வடக்கு  கிழக்கு பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று “எழுத தமிழ்” என்ற பெயரில் பிரம்மாண்டமான பேரணியை நடத்தினர்.
2
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் துவங்கிய இந்த பேரணி, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் நடந்தது. இதில், வடமாகண விவசாய அமைச்சர், வடமாகாண மீன்பிடி அமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், மதகுருமார், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
3
வடமாகாணத்தின் பிற மாவட்டங்களிலிருந்து பெருந்திறளான மக்கள்  யாழ்ப்பாணத்திற்குபேருந்துகளில் வருகைதந்து பேரணியில் கலந்துகொண்டனர்.
4
“கடந்த ஏழு ஆண்டுகளில் பேரணி அல்லது போராட்டம் ஒன்றுக்காக அதிகளவான தமிழ் மக்கள் ஓரிடத்தில் ஒன்றித்த முதலாவது நிகழ்வு இது. அந்த அளவில், தமிழ் மக்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி” என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.